பாட்டேர்ன் (Pattern) என்பது காக்கை உட்கார பனம்பழம் விழும் என்பது போல் தோன்றினாலும் அதற்குள் இருக்கும் உளவியலை நாம் மறுப்பதற்கில்லை. உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு மிகவும் பெயர் வாங்கித்தந்த திரைப்படம் நாயகன் என்று சொல்லலாம். நாயகனுக்கு முன் நிறைய கமர்சியல் திரைப்படங்கள் அவர் நடித்திருந்தாலும் நாயகனுக்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் அவரின் வித்யாசமான அணுகுமுறைக்கும், முயற்சிக்கும் பெயர் பெற்றவை.
நாயகனுக்கு பிறகு வந்த உலக நாயகனின் திரைப்படங்களில் எண்ணற்ற விஷயங்கள் என்னுடைய ஆராய்ச்சியில் தென் பட்டாலும் ஒரு விஷயம் என்னுடைய கவனத்தை ஈர்த்தது. அது அவருடைய கதாநாயகியின் பாத்திர வடிவமைப்பு. நாயகனுக்கு பிறகு நேரடியாக நாற்பத்தி ஐந்து திரைப்படங்களை அவர் செய்திருக்கிறார். அதில் கதாநாயகியின் பங்கை பார்க்கலாம்;
மனைவியை அல்லது காதலியை இழந்தவராக - பத்தி நான்கு திரைப்படங்கள்.
காதலி அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடு - பதினோரு திரைப்படங்கள்.
காதல் கை கூடாமல் போனது - மூன்று திரைப்படங்கள்
நாயகன், குணா, மகாநதி, சுப சங்கல்பம், ஹே ராம், விருமாண்டி, வெற்றி விழா, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களில் மனைவியை இழந்தவராக இருக்கிறார்.
சிங்காரவேலன், கலைஞன், நம்மவர், அவ்வை ஷண்முகி, பம்மல் கே சம்பந்தம், தூங்காவனம் போன்ற திரைப்படங்களில் காதலியுடனோ, மனைவியுடனோ கருத்து ஒருமித்து போகாமல் பின்னர் ஒன்று சேருவது போன்று இருக்கும்.
பேசும் படம், சத்யா, அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியுடன் பெறமுடியாமல் போய்விடும்.
நாயகனுக்கு பிறகு வந்த திரைப்படங்களில் பாதிக்கு மேற்பட்ட திரைப்படங்களில் உலக நாயகியின் கதாப்பாத்திர வடிவமைப்பு எதிர்மறையாகவே இருந்திருக்கிறது.