உண்மை நிலை என்ன என்பதை அறியாமலேயே திரைத்துறையினருக்குள் சண்டை வலுக்கிறது. மாட்டு வண்டியில் இருந்து நாம் காருக்கு மாறியது போல் இயற்கையாகவே திரைத்துறையில் மாற்றம் நடந்திருக்கிறது. மாட்டு வண்டியை ஒழிக்கவேண்டும் என்பது மக்களின் எண்ணமல்ல ஆனால் துரிதமாக பயணம் செய்ய ஒரு வழி கிடைத்துவிட்டதால் மக்கள் அவர்களது வளர்ச்சிக்கு புதியதை தேர்ந்தெடுத்தனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே நியதி. யார் தடுத்தாலும், விருப்பப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மாற்றம் என்பது நடந்துகொண்டே இருக்கும். அது யாரிடமும் அனுமதி கேட்காது.
திரையரங்குகளில் டிக்கெட், உணவு மற்றும் பார்க்கிங் கட்டணம் எல்லாம் அதிகம் அதனால் தான் மக்கள் கூட்டம் வருவதில்லை என்று படைப்பாளிகள் நினைக்கின்றனர். நடிகர்களின் சம்பளம் தான் திரைப்படத்தை அதிக விலைக்கு விநியோகிஸ்தர்களுக்கு விற்க காரணம் அதனால் தான் திரையரங்குகளில் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கவேண்டியிருக்கிறது என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கருத்து. அரசின் வரி மிகை தான் இதற்கு கரணம் என்று ஒரு சாராரும். நானா அதிக சம்பளம் கேட்கிறேன் தயாரிப்பாளரே என்னுடைய திரைப்படம் வெற்றி பெற்றவுடன் என்னுடைய சம்பளத்தை உயர்த்தி பேசுகின்றனர் என்று நடிகர்கள் தரப்பிலும் பேசுவது நாம் அறிந்ததே. ஆனால் இவை எல்லாம் திரைப்படத்தை பார்க்கும் மக்களுக்கு தேவை இல்லை. அவர்கள் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதில்லை. உண்மை நிலை என்னவென்றால் திரைத்துறையில் இயற்கையாகவே ஒரு மாற்றம் வந்திருக்கிறது. அது புரியாமல் ஒருவர் மீது ஒருவர் விரலை காட்டுகிறார்கள்.
இந்த மாற்றம் எங்கே எப்பொழுது யாருக்கெல்லாம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
The Lost Generation — born 1883-1900.
தெருக்கூத்து, கதாகாலச்சேபம், பொம்மலாட்டம், பட்டி மண்டபம் போன்றவை தான் மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்காக இருந்தது. இலக்கியங்கள், இதிகாசங்கள் தான் இதன் சாரம்சம்.
The Greatest Generation — born 1901-1924.
மேடை நாடகங்கள், அரசியல் மேடைகள் சமூக அவலங்களை சொல்லி சமூகத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. தெருக்கூத்து, கதாகாலச்சேபம், பொம்மலாட்டம், பட்டி மண்டபம் போன்றவை இரண்டாம் இடத்தில இருந்தது. காரணம் எல்லோரும் சுதந்திர வேட்க்கையில் இருந்தார்கள். அவர்கள் சுதந்திர போராட்ட கருத்துக்களை முன்வைத்தே இவற்றை பயன் படுத்தினர்.
The Silent Generation — born 1925-1945.
மெதுவாக திரைப்படங்கள் தலை தூக்கிய காலம். இருந்தாலும் சமூக புரட்சி கருத்துக்களை மையமாக கொண்டு மேலே சொன்ன வழிமுறைகளில் மக்களை கவர்ந்தனர்.
Baby Boomer Generation — born 1946-1964.
நாடகங்களின் பொற்கலம் என்றே சொல்லலாம். தேசிய தலைவர்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற கதைகள், சமூக கதைகள், அரசியல் கேலி கதைகள் நிரம்பியிருந்த காலம். இலக்கியம் சார்ந்த பட்டிமண்டபங்களும் புகழ் பெற்று விளங்கியது. நாட்டிய நாடகங்கள், பாட்டு கச்சேரிகள் களை கட்டியது.
Generation X — born 1965-1980.
திரைப்படங்கள் நாடக மேடைகளில் எண்ணிக்கைகளை குறைத்த காலம். புகழ் பெற்ற நாடகங்களை தவிர புதியவர்கள், சிறு நாடகங்கள் பார்வையாளர்களை ஈர்க்க விளம்பரங்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. திரைப்படங்களே மற்றவைகளை பின்னுக்கு தள்ளி இதில் வெற்றி பெற்றது.
Generation Y — born 1981-1996.
பட்டி மண்டபங்கள் பட்டி மன்றங்களாலாக மாறியது. மக்களை கவர கம்பன் கழகங்கள் பெரும் முயற்சிகள் எடுத்தனர். ஹாஸ்ய கிளப்பிகள் நிறைய மக்களை கவர்ந்தது. இருப்பினும் திரைப்படங்கள் முதன்மை வகித்தது. சாட்டிலைட் சானல்கள் தொடங்கி புகழ் பெற்று வந்தது. சினிமா சாட்டிலைட்டை பார்த்து பதறிய காலம்.
Generation Z — born 1997-2012.
சாட்டிலைட் சானெல்கள் புகழின் உச்சிக்கே சென்றது. புதிய சினிமாக்களை, தொடர்களை, நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை வீட்டுக்குள் கட்டிப்போட்டனர். சாதாரணமாக திரைத்துறையினரை எங்கும் பார்க்க முடியாத மக்கள் தொலைக்காட்சி மூலமாக நிறைய தகவல்களை, விருந்தினர்களை சந்தித்தனர். இங்கே தான் திரைப்படங்களின் காலம் பின்னுக்கு தள்ள ஆரம்பித்தது.
Generation Alpha — born 2013-2025.
தொலைக்காட்சிகளும், ஓ டி டி தளங்களும் இன்று முன்னிலை வகிக்கிறது. சினிமா இன்றும் முன்னிலையில் தான் இருக்கிறது ஆனால் அதன் வடிவம் தான் மாறியிருக்கிறது. திரைப்படங்களை நேரடியாகவே ஓ டி டி தளங்களில் வெளியிடும் அளவிற்கு முன்னேறியிருக்கிறது. ஆகவே சினிமா சாகவில்லை ஆனால் வேறொரு தளத்திற்கு மாறியிருக்கிறது.
ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு இடத்தில் தான் டென்ட் அமைத்து சினிமாவை பார்க்க முடியும் என்று இருந்த காலம் போய் இன்று எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போனில் திரைப்படங்களை பார்க்கலாம் என்கிற வளர்ச்சி யார் எழுதிய சட்டம்? இயற்க்கை தானாகவே பரிணாமத்தை எடுத்துக்கொள்கிறது. தண்ணீர் மலையிலிருந்து அருவியாக விழுந்து, சமவெளியில் ஆறாகி, பள்ளங்களில் குணமாகி ஏரியாகி இருப்பது போல் சினிமா இன்று வேறொரு வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்த இயற்கையான மாற்றத்தை செயற்கையாக யாரோ வடிவமைக்கிறார்கள் என்று நினைத்து திரைத்துறையினருக்குள் சண்டை போட்டு நேரத்தை வீணாக்குவதை விட புதிய தளத்தில் உங்களின் திரைப்படத்தை எப்படி வெளியீட்டு லாபமும் மக்களின் வரவேற்பும் பெறலாம் என்று யோசியுங்கள்.