உலக நாயகனின் "ஒரு கைதியின் டைரி" மற்றும் "இந்தியன்" திரைப்படத்தில் வரும் ஒரே விதமான காட்சி மற்றும் வசனம். வருங்கால மாமனாரிடம் தன் காதலனின் உயிருக்கு அவரால் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று என்று இரண்டு திரைப்படத்தில் வரும் மருமகள்களும் அவரிடம் கேட்பார்கள்.
ஒரு கைதியின் டைரி"
ரேவதி - நடக்கப்போற இந்த யுத்தத்துல எனக்கு நீங்கள் ரெண்டுபேருமே...
வயதான கமல் - ரெண்டு பேருமே வேண்டியவங்கதான். அதனால ரெண்டுபேருமே உயிரோட இருக்கணும்னு நினைக்காத பக்தியோட பலம் குறைஞ்சிரும்.
இந்தியன் திரைப்படத்தில் அதே போலொரு காட்சி.
வயதான கமல் வருங்கால மருமகள் மனிஷா கோயிராளாவிடம் - உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா? இருந்தால் வேண்டிக்கோ. ஆர்வத்துல ரெண்டு பேருமே உயிரோட இருக்கணும்னு வேண்டிக்காதே.
கைதியின் டைரியில் அப்பாவை மகன் கொல்வார். இந்தியனில் அப்பா மகனை கொல்வார். இரண்டிலுமே வயதான கமல் பல பேரை பழி வாங்குவார்.. இந்த காட்சி எதேர்சையாக வைக்கப்பட்டதா அல்லது பேன் பாய் மொமெண்ட்டானு தெரியல.