கே ஜி எப் திரைப்படத்தை பார்த்துவிட்டு எல்லோரும் சொல்லும் விஷயம் "எப்படி இதுபோல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் எடுக்கமுடிந்தது? இதை திரை முன் கொண்டுவர படத்துகுப்பு முக்கிய பங்கு வகித்தாலும், பின் திரையில் திரை எழுத்தாளர்கள் செய்துள்ள சாகசங்கள் பெரியது.
பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத தேவையான நேரம், மனித வளம், பணத்தைவிட பல மடங்கு இது போன்ற திரைப்படத்திற்கு தேவை. நிஜத்தில் இயக்குனர் எப்படி திரைக்கதை எழுதியிருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய சிறு அனுபவத்தினைக்கொண்டு உங்களுக்கு ஒரு சூத்திரத்தை சொல்கிறேன்.
ஒரு கதையை ஒரு பவுண்ட் ஸ்க்ரிப்ட்டாக (Bound Script) என்றால் இந்த கதைக்கு ஒன்பது விதமான பவுண்ட் ஸ்கிரிப்ட் தயார் செய்துகொள்ளுங்கள்.
1. பொதுவான கதை.
2. கதாநாயகன் பார்வையில் அந்த கதையின் சம்பவங்கள்.
3. அந்த சம்பவங்களை விவரிப்பவர்களின் பார்வை.
4. அந்த சம்பவம் நடக்கும்பொழுது கதாநாயகியின் பார்வை.
5. ஒவ்வொரு காட்சியையும் வில்லன் (வில்லன்கள்) எப்படி பார்க்கிறார்(கள்).
6. கதை நடக்கும்பொழுது தலைநகரில் என்ன நடக்கிறது.
7. கழுகு பார்வையில் எல்லா காட்சிகளும் எப்படி இருக்கும்.
8. ஒவ்வொரு காட்ச்சியிலும் கே ஜி எப் மக்களின் மனநிலை.
9. கதாநாயகன் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அம்மா எப்படி பார்ப்பார்.
இப்படி பல கோணங்களில் எழுதுவதோடு நிர்க்கமல், எந்த காட்சியில் யாருடைய கோணங்கள் எல்லாம் தேவையோ எல்லாவற்றைரும் காட்சி பிடித்துவிடவேண்டும். பிறகென்ன படத்தொகுப்பாளருடன் உட்கார்ந்து சீட்டு கட்டை கலைத்து விளையாடுவது போல் விளையாடுங்கள்.