பாட்டேர்ன் - Pattern (முறை) என்பது படைப்பாளிகளுக்கு சாதகமா? பாதகமா?. இது முழுவதும் ஆழ் மனதில் இருக்கும் பதிவுகளின் வெளிப்பாடாகவே இருக்கும். படைப்பாளிகளுக்கு இப்படி ஒரு விஷயத்தை அவர்களின் எல்லா படைப்புகளிலும் வெளிப்படுத்துகிறார்கள் என்று பல நேரங்களில் தெரியாது.
உதாரணத்திற்கு இயக்குனர் விக்ரமன் அவர்களின் கதையமைப்பை கூர்ந்து கவனித்தால் இந்த பாட்டேர்ன் இருப்பது தெரியும்.
புது வசந்தம் - ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பெண் நான்கு பேரை முன்னேற்றுவது.
பூவே உனக்காக - காதலிக்காக இரண்டு குடும்பத்தை ஒன்று சேர்ப்பது.
நான் பேச நினைப்பதெல்லாம் - காதலித்த பெண்ணை கலெக்டராக்கி வாழ்க்கையில் முன்னேற்றுவது.
சூர்யவம்சம் - மனைவியை படிக்கவைத்து கலெக்டர் ஆக்குவது.
கோகுலம் - காதலனுக்காக அவன் வீட்டை காப்பாற்றுவது.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - காதலியை பெரிய பாடகியாக்குவது.
உன்னை தேடி - காதலை நிராகரித்த பெண்ணை படிக்க வைப்பது.
Pattern படைப்பாளிகளுக்கே தெரியாமல் பல நேரங்களில் வெளிப்படலாம். அல்லது இதையே தனது முத்திரையாக கூட சில படைப்பாளிகள் கருதலாம். இதில் பிரச்சனை என்னவென்றால் மக்களுக்கு சிறிது காலத்தில் சலிப்பு ஏற்பட்டு விடும்.
எந்த நடிகராக இருந்தாலும் ஒரே உடல் மொழியை தான் இந்த இயக்குனர் காட்டப்போகிறார் என்று சிலரை பார்த்தும் சொல்வதுண்டு. ஒவ்வொரு கதைக்கான களம் வலுவிழந்து போவதும் கதாப்பாத்திரங்கள ஒரே வடிவில் படைப்பது தான்.
இயக்குநர்களுக்குமன்றி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்று சினிமாவில் வேலை செய்யும் எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும்.
இந்த பாடேர்ன் பல சமயங்களில் பாதகமாக இருப்பதை மறுக்க இயலவில்லை.