விக்ரம் VS தூங்காவனம் - அதிசய ஒற்றுமைகள்

 இரண்டுமே உலகநாயகன் கமல் ஹாசனின் திரைப்படங்கள் தான். தூங்காவனம் ஒரு பிரென்ச் திரைப்படத்தின் (Sleepless Nights) உரிமையை வாங்கி முறைப்படி (Official Remake) தமிழில் எடுத்த திரைப்படம். விக்ரமின் கதாப்பாத்திரங்களும், சில சூழல்களும் எப்படி தூங்காவனத்துடன் ஒத்துப்போகிறது என்பதை ஆராந்து பார்த்தேன். அதனுடைய பயனாக எனக்கு கிடைத்த சில அதிசய கோணங்கள் உங்கள் பார்வைக்காக;

விக்ரம் மற்றும் தூங்காவனம் இரண்டுமே சிறிது நேரம் பகலில் நடப்பது போலவும் நிறைய காட்சிகள் இரவில் நடப்பது போலவும் அமைகிறது.

போதை மருந்து கடத்தலைப்பற்றியது தான் இரண்டு திரைப்படங்களும்.

இரண்டு திரைப்படங்களிலும் கமல் முகமூடி அணிவார்.

விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசில் கமல் யார் என்று கண்டுபிடித்தவுடன் அவரது குழுவில் ஓர் அங்கமாவார். தூங்காவனத்தில் திரிஷாவும் கமலை தேடி பின்தொடர்ந்து பிறகு அவருடைய குழுவில் சேருவார்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் போதை பொருள் விஷயங்கள் கமலுக்கு தெரியும். தூங்காவனத்தில் பிரகாஷ் ராஜின் போதை பொட்டலங்கள் கமல் வசம் இருக்கும்.

விக்ரம் திரைப்படத்தில் ரோலெக்ஸின் (Rolex) பொருளை விஜய் சேதுபதி திரும்ப தரவேண்டும். அப்படி இல்லையெனில் ரோலெக்ஸ் தன்னை கொன்று விடுவார் என்று பயப்படுவார். தூங்காவனத்தில் சம்பத் ராஜின் பொருளை பிரகாஷ் ராஜ் கொடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பத் ராஜ் இவரை கொன்றுவிடுவார் என்று பயம் இருக்கும். டபுள் க்ரோஸ்சிங் சீன் (Double Crossing Scene).

விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு தன் பேரனையும் காப்பாற்ற வேண்டும், அதே சமயம் எதிரியுடனும் போராடவேண்டும். தூங்காவனத்தில் கமலின் மகனையும் காப்பாற்றவேண்டும், அதே சமயம் எதிரியுடன் போராடவேண்டும்.

விக்ரமில் பேரனுக்காக பால் அவசர அவசரமாக கலக்கும்பொழுது கீழே சிந்திவிடும். பால் கீழே சிந்தியதும் பால் பவுடரை கலந்து ருசி பார்த்து தருவார். தூங்காவனத்தில் மகனுக்காக பிரெட் ஆம்லெட் சமைக்கும்பொழுது அது கீழே விழுந்துவிடும். மகனுக்கு வேறு கொடுத்துவிட்டு கீழே கிடந்ததை தான் எடுத்து சாப்பிடுவார் கமல்.

விக்ரமில் மருமகளுக்கு கமலை பார்த்தாலே பிடிக்காது. தூங்காவனத்தில் மனைவிக்கு கமலை பார்த்தாலே பிடிக்காது.

விக்ரமில் பின் கழுத்து பகுதியில் கத்திக்குத்து. அந்த வலியுடனேயே போராடுவர் கமல். தூங்காவனத்தில் வயிற்றில் கத்திக்குத்து. அந்த வலியுடனேயே போராடுவர்.

விக்ரமின் இயக்குனரும், தூங்காவனத்தின் இயக்குனரும் உலகநாயகனின் அதி தீவிர ரசிகர்கள்.

விக்ரம் கமலுக்கு கொஞ்சம் நரைத்த முடி. மற்றபடி இரன்டு திரைப்படங்களிலும் ஒரே மாதிரியான தாடி தான்.

இரண்டு திரைப்படங்களுக்கும் முடிவுரை இருக்காது. (Open Ended Climax).

என்னுடைய இந்த ஆராய்ச்சி யாருடைய மனதையும் புண் படுத்துவதற்க்கோ, குற்றம், குறை சொல்வதற்கோ அல்ல. பல நேரங்களில் இதுபோன்ற ஒற்றுமைகள் எதேர்ச்சையாக நடக்கலாம். விக்ரமை ரசிக்க வைத்தது பெரிய நட்சத்திரங்களும் பட்ஜெட்டும் தான். அந்த பட்ஜெட் இருந்தால் காட்சி மூலமாக கதை சொல்வதற்கு ஏதுவாக இருந்தது. தூங்காவனமும் விக்ரமின் கதை சொல்லிற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.