பார்வையாளர்களில் (Audience) இத்தனை ரகங்களா?

 பார்வையாளர்களில் (Audience) இத்தனை ரகங்களா என்று வியக்க வைக்கிறது அறிவியல். 

என்ன நடந்தாலும் முதல் நாள், முதல் காட்சியே பார்த்துவிடவேண்டும். நானும் பார்த்துவிட்டேன் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடவேண்டும். எல்லோருக்கும் முன்பாக பார்த்த திருப்தி எனக்கு கிடைக்க வேண்டும். 

இவ்வளவு நாள் காத்துக்கொண்டிருந்தோம். அதனால் இன்னும் நான்கு ஐந்து நாட்கள் ஆனால் என்ன? கூட்டம் குறைந்ததும் பார்த்துக்கொள்ளலாமே! எப்படி இருந்தாலும் முதல் நாள் எல்லோருக்கும் காட்டிய அதே படம் தானே எனக்கும் கட்டப்போகிறார்கள்?

என்ன திரைப்படம் எடுத்திருக்கிறார்கள்? என்ன இருந்தாலும் கொரியன், இரானியன், பிரென்ச் படங்கள் போல வருமா?

நானெல்லாம் இவரின் படத்தை நூறு கோடி ரூபாய் கொடுத்தாலும் பார்க்க மாட்டேன். என்ன இருந்தாலும் என் தலைவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

இப்போல்லாம் சினிமாக்கு போவதாக இருந்தா ஒரு நாளுக்கு குறைந்தது ஐநூறு ரூபையாவது வேணும். டி.வி லயோ, ஓ.டி.டி லயோ போடுவான் அப்ப பாத்துக்கலாம்.

சினிமா டிக்கெட் இருநூறு, பார்க்கிங் இருநூறு, ஸ்னாக்ஸ் முன்னூறு. டேய்! நீங்கல்லாம் எப்படிடா இவ்ளோ பணத்தை சம்பாதிக்கிறீங்க? மனசாட்சியே இல்லையா? 

நேரம் போகணும் அதுக்கு எந்த படத்தை பார்த்தா என்ன? படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.

நான் எப்பவும் விமர்சனத்தை கேட்டுட்டு தான் படத்துக்கு போவேன். மொக்க படத்துக்கு யாராவது இவ்ளோ செலவழிப்பாங்களா?

நண்பர்கள் / குடும்பத்துடன் படம் போறதே ரொம்ப ஜாலியான விஷயம். கூடமா போனோமா விசில் அடிச்சோமா, என்ஜோய் பண்ணோமானு இருக்கணும். படம் நல்லா இல்லேன்னாலும் கலாய்த்து தள்ளுவோம்.

நான் தனியா தான் தியேட்டருக்கு போவேன். படம் வந்து பத்து நாள் ஆகட்டும். அப்போதான் நிம்மதியா படம் பாக்கலாம். 

நானெல்லாம் தியேட்டருக்கு போயே பல வருஷமாச்சு. ஒன்லி பைரஸி சைட் தான். படமே பிரீயா கிடைக்கும்போது தியேட்டருக்கு போவானேன்?

நான் தனியா தியேட்டருக்கு போற பழக்கமில்லை. யாராவது துணைக்கு வந்தா போலாம். டிக்கெட் கூட நானே எடுக்கறேன்.

நான் யாரோட ரசிகனும் இல்லை. போகணும்னு தோணிச்சுனா போவேன். இல்லேன்னா என்னோட வேலைய பார்ப்பேன்.

உலகத்துலேயே / இந்தியாவிலேயே இவரை போல படம் எடுக்க ஆளில்லை. இவரோட பேட்டியை பாத்தியா? படம் வந்ததுமே பாத்திரனும். அவர் ஒரு பெரிய அறிவாளி. அவர் எடுக்கற படம் பத்து வருஷத்துக்கு அப்பறம் தான் மக்களுக்கு புரியும்.

என்ன? நீ இன்னும் இந்த படத்தை பக்கவேயில்லையா? அப்ப நீயெல்லாம் உயிரோட இருக்கவே லாயக்கில்லை. 

இப்போ இந்த படம் நல்லா ஓடுதுன்னு சொல்றாங்க. போலாமா? வேணாமா?

நான் இந்த படத்தை பாத்துட்டேன். செம சூப்பர். நீயும் அவசியம் பாக்கணும்.

உணர்ச்சி திறன் அதிகமா இருக்கும் நபர்களை மட்டுமே விளம்பரங்கள் மூலமாக / பேட்டிகள் மூலமாக / தூண்டுதலின் மூலமாக வியாபாரத்தின் இறை ஆக்க முடியும். உணர்ச்சி திறன் இருப்பவர்களின் சதவிகிதம் தான் மிக அதிகம்.