சினிமா என்பது உணவு, உடை மற்றும் உறைவிடம் போல மனிதர்களுக்கு அத்தியாவசியமான தேவை இல்லை. இருந்தும் மற்ற துறைகளுக்கு தருவதை விட இந்த துறைக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறதே! சினிமா என்பது இந்த சமூகத்திற்கு மிகவும் அத்யாவசியமானதா? சினிமா இல்லாமல் மக்களால் உயிரோடு இருக்க முடியாதா?
பலவகையான சோப்பு, சீப்பு பொருட்கள் சந்தையில் இருக்கிறது. இந்த சோப்பு தான் இருப்பதிலேயே சிறந்தது, இந்த சோப்பு மட்டமானது என்று நாம் ப்ளூ சட்டை போட்டுக்கொண்டு விமர்சனம் செய்வதில்லையே? ஏன் சினிமாக்களுக்கு மட்டும் விமர்சனம் தேவைப்படுகிறது? இந்த பருப்புகள் விலை அதிகம் மட்டும் இல்லை, கலப்படமும் அதிகம். அந்த வைகான பருப்பு தான் சிறந்தது என்று மனிதர்களுக்கு அத்தியாவசியமான விஷயங்களுக்கு ஏன் விமர்சகர்களிடம் இருந்தோ, மக்களிடம் இருந்தோ சமூக வலைத்தளங்களில் பதிவு இல்லை? இந்த நடிகர் அப்படி செய்துவிட்டார், அந்த நடிகர் அப்படி செய்துவிட்டார் என்று சொல்லி நேரத்தை வீணடிக்கும் இன்டர்நெட் போராளிகள், சமையல் எண்ணெய் விலை ஏற்றம் பற்றி ஏன் பேசுவதில்லை? இந்த கோவிலை சரியாக பராமரிப்பதில்லை அதனால் அந்த நிர்வாகம் கோவிலை பராமரிக்க தகுதி இல்லை என்று சொல்ல ஏன் யாரும் முன்வருவதில்லை?
நான் முன்பு சொன்னதுபோல் உணவு, உடை மற்றும் இருப்பிடத்தைவிட சினிமா மேலோங்கிவிட்டதா?
உளவியல் ரீதியாக பார்த்தால் ஒவ்வொரு மனிதர்களுக்குள் குறைத்து இரண்டு நபர்கள் (முற்றிலும் வேறுவித குணாதிசயம் கொண்டவர் - Ego and Alter Ego) இருப்பார்கள். ஒருவர் விழிப்புணர்வு இல்லாத நடமாடும் மனிதர் (Unconsciously Conscious) , மற்றொருவர் விழிப்புணர்வு உள்ள ஆழ்மன மனிதர் (Consciously Sub-Conscious). இவற்றை அறுபத்தி ஆறாயிரம் குணாதிசயமாக பிரித்து பார்க்க முடியும் (Sixty Six thousand types of human behaviors). இந்த அறுபத்தி ஆறாயிரத்தில் எந்தவித மனித குணாதிசயங்களும் வெளியிலும் உள்ளும் நம்மை ஆளலாம். ஆழ்மனதில் இருக்கும் நபர் என்னவெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறாரோ அதுவாகவே அவர் நடந்துகொள்கிறார். பொதுவாக எல்லோருக்குள்ளும் ஒரு விமர்சகன் இருக்கிறான் ஆனால் அளவுகோல் மட்டும் மாறுபடும்.
விழிப்புணர்வு இல்லாத மனிதனுக்கு விழிப்புணர்வு உள்ள ஆழ்மனதிற்கு ஏதாவது ஒரு விஷயம் உணவாக கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி செய்வதால் நடமாடும் மனிதருக்கு நடக்காத ஆசைகளை ஆழ்மன மனிதர் செய்து தருவார். தன்னுடைய உடல் இச்சைக்கு இணங்காத மனைவியை கொண்டவருக்கு ஆழ்மனம் வேறு ஒருவரை அந்த கோணத்தில் பார்க்க தூண்டும். இப்படி நடமாடும் மனிதருக்கு கிடைக்காத சந்தோஷத்தை ஆழ்மனம் நடத்திக்கொடுக்கும்.
சினிமா வருவதற்கு முன் தெருக்கூத்து, கதாகாலச்சேபங்கள், நாடகம் என்று தன்னுடைய கவனத்தை வேறுஒரு திசைக்கு கவனத்தை திருப்பினர். பலர் புகையிலை, பீடி, சிகரெட் என்று ஆழ்மனதை திருப்திப்படுத்தினர்.
சினிமா என்பது காட்சியோடு, இசை, இயல் என்று பல்வேறு விஷயங்களுடன் அடங்கியது. தெருக்கூத்து, கதாகாலச்சேபங்கள், நாடகம் எல்லாம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடத்த முடியாது. ஆனால் சினிமா ஒரே நேரத்தில் எல்லா தரப்பு மக்களையும் சென்று சேர்ந்துவிடுகிறது. இதனால் இயற்கையாகவே இதற்கு வரவேற்பும், விமர்சனமும் வருகிறது.
கதா பாத்திரங்கள், கதையை, வசனத்தை திரையில் பார்க்கும்பொழுது மனிதர்கள் தன்னை அதனோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். வசனத்திற்காகவே பாலச்சந்தர், பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர்களின் படங்களை மக்கள் பார்த்தனர். அதில் இடம்பெறும் வசனத்தை நண்பர்களிடம் சொல்லி பெருமை பட்டுக்கொள்வார்கள். நம்மால் செய்ய முடியாததை நம்மை போன்ற கதா பாத்திரங்கள் திரையில் செய்யும்பொழுது நாமே செத்ததுபோன்ற திருப்தி ஏற்படுகிறது. இந்த உளவியல் காரணங்களுக்காகவே மக்கள் சினிமாவை அதிகமாக நேசிக்கின்றனர். அவர்கள் செய்ய விரும்புவதை கதா பாத்திரங்கள் செய்யும்பொழுது கை தட்டி வரவேற்கிறார்கள். வீட்டில் மனைவியை அடிக்க முடியாத கணவன் திரையில் ஒரு கணவன் மனைவியை அடிக்கும்பொழுது கை தட்டி வரவேற்கிறேன். இப்படி செய்வதால் அவனுடைய ஆழ்மனமும் திருப்தி அடைகிறது வீட்டிலும் சென்று மனைவியுடன் சண்டையிட மாட்டார்.
வேலையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நிகழ்காலத்தில் முடியாமல் போகலாம் ஆனால் திரையில் நேர்மையாக இருப்பவரை பார்த்து சந்தோசப்படுகிறார்கள். தவறுகளை தட்டி கேட்கும் திரை கதா பாத்திரங்களை மக்கள் வரவேற்பார்கள் ஆனால் உண்மையில் அவர்களால் அப்படி இருக்க முடியாது.
சினிமா என்பது கருத்து சுதந்திரத்திற்குள் வருகிறது. அதனால் நூறு ருபாய் கொடுத்தேன் என்று சொல்லி அந்த திரைப்படத்தை விமர்சனமும் செய்யலாம் வேறவேக்கவும் செய்யலாம். ஆனால் சோப்பு, பவுடர், பருப்பு, அரிசிக்கு அந்த நிறுவனத்தின் பேரை சொல்லி பொது தளங்களில் பதிவிட முடியாது. சம்பந்த பட்ட நிறுவனம் உங்கள் மீது மான நஷ்ட வழக்கை தொடரலாம். ஆனால் சினிமா என்பது ஒரு எளிமையான எதிரி. எங்கிருந்து வேண்டுமானாலும், என்ன பெயரிலும் விமர்சனம் செய்யலாம். உள்முக நபரால் (Introvert Person) நடைமுறையில் ஒரு பெண்ணை கடத்தி கற்பழிக்க முடியாது. அதனால் அவர்கள் பயன்படுத்தும் முறை 'அந்த' வகை சினிமாவை பார்த்து தங்களின் ஆழ் மன இச்சையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். இப்படி சினிமா என்று ஒன்று இல்லாமல் போனால் உள்முக நபர்களின் தீமைகள் சமூகத்தை இன்னும் கடுமையாக பாதித்திருக்கும்.
என்ன செய்தால் இன்றைய பொழுதை கழிக்கலாம் என்று பார்க்கிலும், பீச்சிலும், மாலிலும் பல நூறு மனிதர்களை தினம் தினம் பார்க்க முடிகிறது. வெட்டி பேச்சு பேசி நேரத்தை வீணாக்குபவர்கள், வேலை இல்லாமல் / செய்யாமல் இருப்பவர்கள், மாணவர்கள், வயதானவர்கள், வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் என்று பல்வேறு விதமான மனிதர்களை தினமும் நாம் திரையரங்குகளில் பார்க்க முடியும். இவர்களை சமூக விரோதி ஆக்காமல் இருக்க வைப்பதே சினிமா போன்ற துறைகள் தான்.