இயக்குனர் ஹெச்.வினோத் எந்த வகை எழுத்தாளர் தெரியுமா?

 எழுத்தாளரில் வகைகளா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆம், எத்தலர்களில் பல வகைகள் உண்டு. என்னுடைய ஆராய்ச்சி புத்தகமான "டிக்கோடிங் ரைடர்ஸ்" (Decoding Writers) புத்தகத்தில் மூவாயிரத்து முந்நூற்று இருபத்தி ஐந்து வகையான (3325 varieties of writing) எழுதும் வகைகளை குறிப்பிட்டிருக்கிறேன். எழுத்தாளர்களில் ஏன் இதனை வகைகள் என்று நீங்கள் நினைக்கலாம். எல்லா எழுத்தாளர்களும் ஒரே சிந்தனைத்திறனோடு (Thinking Capability) இருப்பதில்லை. அதற்கு அவர்களின் இயல்பான குணாதிசயங்கள், வளரும் சூழ்நிலைகள், பழகும் மக்கள் போன்றவையே காரணம்.

புத்தகம் எழுதுபவர் பயன்படுத்தும் எழுத்து முறை (Methodology) வேறு, இலக்கியங்களில் கலந்துகொள்பவர்கள் பயன்படுத்தும் எழுத்து முறை வேறு. இப்படி விமர்சகர், விரிவுரையாளர், கட்டுரை எழுதுபவர், பத்திரிகை எழுத்தாளர், தொல்பொருள் ஆராய்ச்சி செய்பவர், பாடலாசிரியர் என்று எழுத்தாளர்களின் வேளைக்கு ஏற்ப அவர்கள் அணுகும் எழுத்து முறைகள் வேறுபடுகிறது. தாஜ் மஹாலைப்பற்றி இவர்களை எழுதச்சொன்னால் ஒவ்வொருவருடைய அணுகுமுறையும், எழுத்து தன்மையும் வேறுபடும்.
ஹெச்.வினோத் சமீபத்தில் பல நேர்காணல்களில் பங்கேற்றிருக்கிறார். அவர் பயன்படுத்தும் சொற்களை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அவர் எந்த வகையான எழுத்தாளர் என்று உங்களுக்கே நன்றாக விளங்கும். தரவுகளையும் (Data), புள்ளியியல்களையும் (Statistics) அதிகமாக பயன்படுத்தி அதனை ஆராய்ந்து கதை வடிவமாக இவர் சித்தரிக்கிறார். இவர் ஒரு உள்முக நபராக (Introvert) இருந்தாலும் இவற்றுக்கான தரவுகளை இவரே சேகரித்து அதனுடைய உண்மை தன்மையை தெரிந்துகொள்கிறார். பொதுவாக உள்முக நபரால் பலருடன் சகஜமாக பேசி தரவுகளை பெற முடியாது. இவர் அதற்காக வெளிமுக நபரின் தலைமையில் ஒரு குழுவை கூட அமைத்து தரவுகளை சரி பார்க்கலாம். அல்லது தரவுகளை சரி பார்க்கும்பொழுது மட்டும் வெளிமுக நபராக (Extrovert) சிறிது காலம் இவர் பயணிக்கலாம்.
இவருக்கான தரவுகள் எல்லாமே இவருக்கு வெளியில் இருந்துதான் வருகிறது. அது பத்திரிக்கை செய்தியாக இருக்கலாம். பிறகு அந்த செய்தியின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள தரவுகளை திரட்டுகிறார். அந்த தரவுகளை கதாபாத்திர வடிவம் கொடுத்து திரைக்கதை அமைக்கிறார். இப்படி செய்வது மூலமாக இவர் நிகழ்காலத்தில் செய்யும் ஆய்வுகளை திரையில் இவருக்கு பதிலாக கதாநாயகன் செய்துவிடுகிறார்.
Introvert - Other Focus - Auditory - Other Sources - Continuous Mental Activity - Associative Thinking என்கிற முறையை தான் இவர் அதிகமாக பயன்படுத்துகிறார்.
சினிமாவிற்கு மட்டும் அல்ல. இவர் வாழ்க்கையில் எடுக்கும் எல்லா முடிவுகளும் இந்த அறிவியல் சூத்திரத்தின் வழியே தான் இருக்கும். இவரின் ஆழ்மனது இப்படிப்பட்ட சூத்திரங்களை சொல்லும் நபர்களை மட்டுமே நண்பர்களாக, உறவினர்களாக ஏற்றுக்கொள்ளும்.