சினிமா என்பது உணவு, உடை மற்றும் உறைவிடம் போல மனிதர்களுக்கு அத்தியாவசியமான தேவை இல்லை. இருந்தும் மற்ற துறைகளுக்கு தருவதை விட இந்த துறைக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறதே! சினிமா என்பது இந்த சமூகத்திற்கு மிகவும் அத்யாவசியமானதா? சினிமா இல்லாமல் மக்களால் உயிரோடு இருக்க முடியாதா?
பலவகையான சோப்பு, சீப்பு பொருட்கள் சந்தையில் இருக்கிறது. இந்த சோப்பு தான் இருப்பதிலேயே சிறந்தது, இந்த சோப்பு மட்டமானது என்று நாம் ப்ளூ சட்டை போட்டுக்கொண்டு விமர்சனம் செய்வதில்லையே? ஏன் சினிமாக்களுக்கு மட்டும் விமர்சனம் தேவைப்படுகிறது? இந்த பருப்புகள் விலை அதிகம் மட்டும் இல்லை, கலப்படமும் அதிகம். அந்த வைகான பருப்பு தான் சிறந்தது என்று மனிதர்களுக்கு அத்தியாவசியமான விஷயங்களுக்கு ஏன் விமர்சகர்களிடம் இருந்தோ, மக்களிடம் இருந்தோ சமூக வலைத்தளங்களில் பதிவு இல்லை? இந்த நடிகர் அப்படி செய்துவிட்டார், அந்த நடிகர் அப்படி செய்துவிட்டார் என்று சொல்லி நேரத்தை வீணடிக்கும் இன்டர்நெட் போராளிகள், சமையல் எண்ணெய் விலை ஏற்றம் பற்றி ஏன் பேசுவதில்லை? இந்த கோவிலை சரியாக பராமரிப்பதில்லை அதனால் அந்த நிர்வாகம் கோவிலை பராமரிக்க தகுதி இல்லை என்று சொல்ல ஏன் யாரும் முன்வருவதில்லை?