Showing posts with label Tamil Articles. Show all posts
Showing posts with label Tamil Articles. Show all posts

பார்வையாளர்களில் (Audience) இத்தனை ரகங்களா?

 பார்வையாளர்களில் (Audience) இத்தனை ரகங்களா என்று வியக்க வைக்கிறது அறிவியல். 

என்ன நடந்தாலும் முதல் நாள், முதல் காட்சியே பார்த்துவிடவேண்டும். நானும் பார்த்துவிட்டேன் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடவேண்டும். எல்லோருக்கும் முன்பாக பார்த்த திருப்தி எனக்கு கிடைக்க வேண்டும். 

இவ்வளவு நாள் காத்துக்கொண்டிருந்தோம். அதனால் இன்னும் நான்கு ஐந்து நாட்கள் ஆனால் என்ன? கூட்டம் குறைந்ததும் பார்த்துக்கொள்ளலாமே! எப்படி இருந்தாலும் முதல் நாள் எல்லோருக்கும் காட்டிய அதே படம் தானே எனக்கும் கட்டப்போகிறார்கள்?

பெரிய நடிகர்களுக்கான கதை பற்றாக்குறை இருக்கிறதா?

வணிகரீதியில் வெற்றிப்படங்களை தரும் / தர நினைக்கும் நடிகர்கள் அவர்களுடைய கதை தேர்வினை கவனமாக செய்கிறார்கள். முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் (வணிக ரீதியில் / வசூலில் என்று புரிந்துகொள்ளவேண்டும்} இருக்கும் நடிகர்களுக்கான கதை பற்றாக்குறை இருப்பதாக அவ்வப்போது திரைத்துறையில் பேசிக்கொள்வதுண்டு. வருடத்திற்கு நூறு துணை, இணை இயக்குநரையாவது உருவாக்கிவிடும் நம்முடைய திரைத்துறையில் கதைக்கான பஞ்சம் இருக்கிறதா? இயக்குனரே இங்கே எழுத்தாளராக இருக்கவேண்டும் அல்லது எழுத்தாளர்களுக்கு இயக்கும் திறன் இருக்கவேண்டும் என்கிற மாய விதி வேறு இருக்கிறது.

ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் நூற்றுக்கணக்கான கதைகளை மாதம் தோறும் எழுத்தாளர்கள் அனுப்புகிறார்கள். அதில் பத்து சதவிகிதம் கூடவா பெரிய நடிகர்களுக்கு பொருத்தமாக இருக்காது? தன்னுடைய கதைகளை தயாரிப்பாளரோ அல்லது நடிகர்களோ படித்துவிட்டு வாய்ப்பு தரமாட்டார்களா என்று எங்கும் நூற்றுக்கணக்கான இயக்குனர்கள் ஒரு பக்கம், யாரிடம் எனக்கு ஏற்ற கதை இருக்கிறது என்று காத்துக்கொண்டிருக்கும் நடிகர்கள் ஒரு பக்கம் என்று இரு துருவங்களாக பிரிந்து இருக்கிறார்கள். இவர்களை இணைப்பது யாருடைய வேலை? இதை நாம் அடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

இயக்குனர் ஹெச்.வினோத் எந்த வகை எழுத்தாளர் தெரியுமா?

 எழுத்தாளரில் வகைகளா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆம், எத்தலர்களில் பல வகைகள் உண்டு. என்னுடைய ஆராய்ச்சி புத்தகமான "டிக்கோடிங் ரைடர்ஸ்" (Decoding Writers) புத்தகத்தில் மூவாயிரத்து முந்நூற்று இருபத்தி ஐந்து வகையான (3325 varieties of writing) எழுதும் வகைகளை குறிப்பிட்டிருக்கிறேன். எழுத்தாளர்களில் ஏன் இதனை வகைகள் என்று நீங்கள் நினைக்கலாம். எல்லா எழுத்தாளர்களும் ஒரே சிந்தனைத்திறனோடு (Thinking Capability) இருப்பதில்லை. அதற்கு அவர்களின் இயல்பான குணாதிசயங்கள், வளரும் சூழ்நிலைகள், பழகும் மக்கள் போன்றவையே காரணம்.

புத்தகம் எழுதுபவர் பயன்படுத்தும் எழுத்து முறை (Methodology) வேறு, இலக்கியங்களில் கலந்துகொள்பவர்கள் பயன்படுத்தும் எழுத்து முறை வேறு. இப்படி விமர்சகர், விரிவுரையாளர், கட்டுரை எழுதுபவர், பத்திரிகை எழுத்தாளர், தொல்பொருள் ஆராய்ச்சி செய்பவர், பாடலாசிரியர் என்று எழுத்தாளர்களின் வேளைக்கு ஏற்ப அவர்கள் அணுகும் எழுத்து முறைகள் வேறுபடுகிறது. தாஜ் மஹாலைப்பற்றி இவர்களை எழுதச்சொன்னால் ஒவ்வொருவருடைய அணுகுமுறையும், எழுத்து தன்மையும் வேறுபடும்.

2023ஆம் ஆண்டில் சிறிய பட்ஜெட் திரைப்படம் எடுக்கலாமா?

 ஐந்து கோடி ரூபாய்க்கு கீழே முற்றிலும் புதியவர்களால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு தமிழ் திரைப்படங்களாக இருந்தாலும் (நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் போன்றவை) 2022ஆம் ஆண்டில் வெற்றி பெறவில்லை. ஐந்து கோடி என்று ஒரு உதாரணத்திற்கு தான் சொன்னேன். ஆனால் நிறைய திரைப்படங்கள் ஒன்று முதல் இரண்டு கோடிக்குள் புதியவர்களால் எடுக்கப்படுகிறது. இவை எதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்கும்படியான கதையோ, திரைக்கதை வடிவமைப்போ, இசையோ, நடிப்போ, வசனமோ இல்லை.  விளம்பரம் கூட சரியாக செய்யப்படவில்லை. நிகழ் காலத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் சூத்திரத்தின் ரகசியம் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படத்தின் தரத்தில் உள்ளது. புரிந்தவர்கள் புரிந்துகொண்டால், பணத்தையாவது காப்பாற்றலாம். 

சினிமா நம் சமூகத்திற்கு மிகவும் அவசியமானதா?

 சினிமா என்பது உணவு, உடை மற்றும் உறைவிடம் போல மனிதர்களுக்கு அத்தியாவசியமான தேவை இல்லை. இருந்தும் மற்ற துறைகளுக்கு தருவதை விட இந்த துறைக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறதே! சினிமா என்பது இந்த சமூகத்திற்கு மிகவும் அத்யாவசியமானதா? சினிமா இல்லாமல் மக்களால் உயிரோடு இருக்க முடியாதா? 

பலவகையான சோப்பு, சீப்பு பொருட்கள் சந்தையில் இருக்கிறது. இந்த சோப்பு தான் இருப்பதிலேயே சிறந்தது, இந்த சோப்பு மட்டமானது என்று நாம் ப்ளூ சட்டை போட்டுக்கொண்டு விமர்சனம் செய்வதில்லையே? ஏன் சினிமாக்களுக்கு மட்டும் விமர்சனம் தேவைப்படுகிறது? இந்த பருப்புகள் விலை அதிகம் மட்டும் இல்லை, கலப்படமும் அதிகம். அந்த வைகான பருப்பு தான் சிறந்தது என்று மனிதர்களுக்கு அத்தியாவசியமான விஷயங்களுக்கு ஏன் விமர்சகர்களிடம் இருந்தோ, மக்களிடம் இருந்தோ சமூக வலைத்தளங்களில் பதிவு இல்லை? இந்த நடிகர் அப்படி செய்துவிட்டார், அந்த நடிகர் அப்படி செய்துவிட்டார் என்று சொல்லி நேரத்தை வீணடிக்கும் இன்டர்நெட் போராளிகள், சமையல் எண்ணெய் விலை ஏற்றம் பற்றி ஏன் பேசுவதில்லை? இந்த கோவிலை சரியாக பராமரிப்பதில்லை அதனால் அந்த நிர்வாகம் கோவிலை பராமரிக்க தகுதி இல்லை என்று சொல்ல ஏன் யாரும் முன்வருவதில்லை?

சினிமாவை யாராலும் கற்றுக்கொள்ள முடியாது. அதெல்லாம் பிறவியிலேயே இருக்கவேண்டும்?!

 நம்மால் யாருக்கும் வீரத்தை கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் போர் தந்திரங்களை கற்றுக்கொடுக்க முடியும். வீரம் என்பது பிறவி குணம். வெறும் வீரத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நம்மால் எதிரிகளின் யுக்திகளை ஜெயிக்க முடியாது. எப்பேர்ப்பட்ட வீர தீர அரசனாக இருந்தாலும் ஆலோசனை சொல்ல ஒரு குரு தேவை. அதனால் தான் அரசர்கள் ராஜா குருவை சபை அமர்த்தினார்கள். அந்த ராஜா குருவால் வீரத்தை கற்றுக்கொடுக்க முடியாது ஆனால் போர் முறைகளை கற்றுக்கொடுக்க முடியும். அரசரின் பலம் என்ன பலவீனம் என்ன, படைகளை எப்படி நகர்த்தவேண்டும், யார் யாருக்கு எப்பொழுது ஆணைகள் பிறப்பிக்க வேண்டும் போன்றவற்றை ராஜகுரு சொல்கிறார். 

மூன்று வகையான திரை எழுத்தாளர்களைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

 மூன்று வகையான திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். 

முதல் வகை 'ப்ரோடிஜி' (Prodigy) என்கிற அதிமேதாவி. இவர்கள் இயற்கையிலேயே அதிகமான உள்வாங்கும் திறன் கொண்டவர்கள். ஆசிரியரோ, குருவோ இவர்களுக்கு தேவை இல்லை. ஆசிரியர்கள் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நேரிடும். பார்த்த, கேட்ட மாத்திரத்திலேயே இவர்களால் சரியான முறையில் உள்வாங்கிக்கொண்டு அதிசயிக்கத்தக்க வகையில் வெளிக்கொணர்வர்கள். இவர்கள் பெரும் பெயர், புகழ், பதவிகளோடு குறுகிய காலத்தில் முன்னேறுவர். 

ஒரு கைதியின் டைரி மற்றும் இந்தியன் - காட்சி ஒற்றுமை


உலக நாயகனின் "ஒரு கைதியின் டைரி" மற்றும் "இந்தியன்" திரைப்படத்தில் வரும் ஒரே விதமான காட்சி மற்றும் வசனம். வருங்கால மாமனாரிடம் தன் காதலனின் உயிருக்கு அவரால் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று என்று இரண்டு திரைப்படத்தில் வரும் மருமகள்களும் அவரிடம் கேட்பார்கள்.  

விக்ரம் VS தூங்காவனம் - அதிசய ஒற்றுமைகள்

 இரண்டுமே உலகநாயகன் கமல் ஹாசனின் திரைப்படங்கள் தான். தூங்காவனம் ஒரு பிரென்ச் திரைப்படத்தின் (Sleepless Nights) உரிமையை வாங்கி முறைப்படி (Official Remake) தமிழில் எடுத்த திரைப்படம். விக்ரமின் கதாப்பாத்திரங்களும், சில சூழல்களும் எப்படி தூங்காவனத்துடன் ஒத்துப்போகிறது என்பதை ஆராந்து பார்த்தேன். அதனுடைய பயனாக எனக்கு கிடைத்த சில அதிசய கோணங்கள் உங்கள் பார்வைக்காக;

திரைக்கதையில் பழைய பாணி, புதிய பாணி

  திரைக்கதையில் ஓல்ட் ஸ்கூல் ஆப் தாட், நியூ ஸ்கூல் ஆப் தாட் (Old School of Thought, New School of Thought).

"இதெல்லாம் பழைய பானீங்க (Old Method). இப்பலாம் இப்படி திரைக்கதை எழுதறதே இல்ல". கோடம்பாக்கம் மட்டும் அல்ல, உலக திரைக்கதாசிரியர்களின் பிரச்சனை இது. ஓல்ட் ஸ்கூல் ஆப் தாட், நியூ ஸ்கூல் ஆப் தாட் பற்றி பார்ப்பதற்கு முன் அறுபது ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமாவை பார்க்கலாம். வசனங்களால் நிரப்பப்பட்ட காட்சிகள், சொல்வதை நீளமாக சொல்வது, மீண்டும் மீண்டும் சொல்வது போன்றவைகள் இருந்தது. 

கே ஜி எப் போன்று விறுவிறுப்பாக திரைக்கதை எழுதவேண்டுமா?

  கே ஜி எப் திரைப்படத்தை பார்த்துவிட்டு எல்லோரும் சொல்லும் விஷயம் "எப்படி இதுபோல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் எடுக்கமுடிந்தது? இதை திரை முன் கொண்டுவர  படத்துகுப்பு முக்கிய பங்கு வகித்தாலும், பின் திரையில் திரை எழுத்தாளர்கள் செய்துள்ள சாகசங்கள் பெரியது. 

பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத தேவையான நேரம், மனித வளம், பணத்தைவிட பல மடங்கு இது போன்ற திரைப்படத்திற்கு தேவை. நிஜத்தில் இயக்குனர் எப்படி திரைக்கதை எழுதியிருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய சிறு அனுபவத்தினைக்கொண்டு உங்களுக்கு ஒரு சூத்திரத்தை சொல்கிறேன். 

மூன்று விதமான எழுத்தாளர்கள் ஒரு சம்பவம் - வேறுபாடும் பார்வை

 ஒரு சம்பவத்தை (Event) மூன்று விதமான திரைக்கதாசிரிகள் (Visual, Auditory and Kinesthetic) நேரில் பார்க்கிறார்கள். அதை அவர்கள் காட்சியாக எழுதும் பொழுது இப்படி இருக்கும்;

காட்சி திறன் உள்ள எழுத்தாளர் (Visual Trait) - உச்சி வெயிலில் ஒரு பெண் கோட் சூட் அணிந்துகொண்டு கடை வீதியில் வந்துகொண்டிருக்கிறாள். அவளது நீல நிற பேகை தலையில் வைத்து வெப்பத்திலிருந்து தப்பிக்க நினைக்கிறாள். தலையிலிருந்து கண்கள் வழியாக வியர்வை ஊற்றிக்கொண்டே இருக்கிறது. அதை வெள்ளை நிற கர்சீப்பால் துடைக்க, ஒரு திருப்பத்தில் பச்சை நிற சன்டிரோ ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை வேகமாக உரசி சென்றது. வலது கையில் நன்றாக அடிப்பட்டு வீங்கிவிட்டது. வெய்யிலின் தாக்கம் வேறு கை வலி வேறு அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அருகில் இருக்கும் பழ கடைக்கு சென்று அங்கு இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள்.

திரைக்கதையின் இலக்கணத்தை உடைக்கலாமா?

இது ஒரு மாய வளையம். சினிமா மொழியும், சினிமா இலக்கணமும் ஒன்றோடு ஒன்று கலந்தது. இரண்டையும் தனித்தனியே பிரிக்க இயலாது. உதாரணமாக, சினிமாவின் மொழியை மக்களிடம் காட்சி வழியே சேர்க்க பெரும் உதவியாக இருப்பது;

  • கேமரா, லென்ஸ், போகஸ் மற்றும் அதன் அசைவுகள் (Camera, Lens, Focus and Movement).
  • காட்சிப்படுத்துதலும், அரங்கேற்றப்படுத்துவதும் (Mis-en-Scene).
  • ஒளி (Lighting).
  • இசை மற்றும் சப்தம் (Sound, Voice and Music).
  • படத்தொகுப்பு (Editing).
  • நடிப்பு மற்றும் செயல் (Performance).

புதிய கரு (Idea) எங்கிருந்து வருகிறது? Formula for Out of the box thinking

உலகில் உள்ள எல்லா கதைகளும் சொல்லியாகிவிட்டதா?

அப்படியென்றால் புதிய கருவை (Idea) எங்கிருந்து தேடுவது?

போட்டி நிறைந்த இந்த உலகில் எப்படி புதிய சிந்தனைகளை (Out of the Box Thinking) கொடுத்து மக்களை எப்படி கவர்வது?

இயக்குனர் விக்ரமன் அவர்களின் பாட்டேர்ன் (Pattern of Director Vikraman)

 பாட்டேர்ன் - Pattern (முறை) என்பது படைப்பாளிகளுக்கு சாதகமா? பாதகமா?. இது முழுவதும் ஆழ் மனதில் இருக்கும் பதிவுகளின் வெளிப்பாடாகவே இருக்கும். படைப்பாளிகளுக்கு இப்படி ஒரு விஷயத்தை அவர்களின் எல்லா படைப்புகளிலும் வெளிப்படுத்துகிறார்கள் என்று பல நேரங்களில் தெரியாது. 

உதாரணத்திற்கு இயக்குனர் விக்ரமன் அவர்களின் கதையமைப்பை கூர்ந்து கவனித்தால் இந்த பாட்டேர்ன் இருப்பது தெரியும். 

குணா VS ஆளவந்தான் - கதாப்பாத்திர வடிவமைப்பு

 இரு வேறு விதமான தட்டை வடிவ கதாப்பாத்திர வளைவு (Two Different Flat Arc).
குணா:
கதாப்பாத்திர பங்கு (Character Role) - கதாநாயகன் (Protagonist)
கதாப்பாத்திர தரம் (Character Quality) - மாறா தன்மை (Static)
ஆளுமை பண்பு (Personality Trait) - உள்முக நபர்கள் (Introvert)
ஐ என் எப் பி வகையை சார்ந்தவர்கள் (INFP - Intuition, Feelings and Perceiving).
ஆளுமை பிரிவு (Personality Type) - பி வகை (B Type)

நந்து:
கதாப்பாத்திர பங்கு (Character Role) - நண்பனான எதிரி (Foil)
கதாப்பாத்திர தரம் (Character Quality) - மாறா தன்மை (Static)
ஆளுமை பண்பு (Personality Trait) - உள்முக நபர்கள் (Introvert)
ஐ என் எப் பி வகையை சார்ந்தவர்கள் (INFP - Intuition, Feelings and Perceiving).
ஆளுமை பிரிவு (Personality Type) - ஏ வகை (A Type)

இயக்குனர் ரா. பார்த்திபனின் கதை உலகம்

 பாட்டேர்ன் (Pattern) என்னும் முறை எப்படி எழுத்தாளர்களை தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டு புதிய வகை சிந்தனையை வரவிடாமல் தடுக்கிறது என்பதை இதற்கு முன் பல கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். பாட்டேர்னை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் எழுத்தாளர்கள் பெரிய அளவில் பேசப்படுவார்கள். அதற்குள் எழுத்தாளர்கள் வீழ்ந்துவிட்டால் புதர்க்குழி மணல் போல் மூழ்க வேண்டியிருக்கும்.

பாபநாசம் திரைப்படத்தில் சுயம்புலிங்கம் கொலை செய்திருந்தால் கதை என்னவாகியிருக்கும்?

 சுயம்புலிங்கம் தவறுதலாக ஒரு இளம் பெண்ணை அவர் வீட்டில் கொலை செய்திருந்தால்? அவரின் குடும்பம் அவர் இறங்கிய அளவிற்கு இறங்கி கை கொடுத்திருக்குமா?

ஒரு அனுமான கேள்வி (Hypothetical Question) தான். இதை ஒரு ஆணாதிக்க பதிவாக எண்ணவேண்டாம்.

பாபநாசம் திரைப்படத்தில் ஒரு கொலையை மறைக்க சுயம்புலிங்கம் பாடுபடுவது ஏன்?

கிரிஞ்சு (Cringe) - பார்வையாளர்களின் உளவியல்

தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டில் 1950 முதல் 1970 வரை வந்த திரைப்படங்கள், அதன் வசனம், பாடல்கள் மட்டுமே அதிகமாக ஒலிக்கும். குடும்பத்துடன் திரையரங்கில் நான் பார்த்த திரைப்படங்கள் எல்லாமே சிவாஜி, எம்ஜியார் போன்றவர்களுடையது. விவரம் தெரிந்த பின்பு தனியாக நானே புதிய திரைப்படங்களை பார்க்க தொடங்கிவிட்டேன். வேகமாக நகரும் திரைக்கதை, புதியவகையான உடை, வசனம், நடிகர்களின் பாவனைகள் எல்லாமே என்னை கவர்ந்தது. ஒளியும் ஒலியும் தான் புதிய பாடல்களை கேட்க ஒரே வழி. ஐந்து பழைய பாடல்கள் போட்டால் ஒரு புதிய பாடல்களை போடுவார்கள். அதுவும் கடைசியாக.

அடையாளம் (Identity) VS சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள்

இதற்கு முன் நான் எழுதிய என்னுடைய ஆராய்ச்சி கட்டுரையில் பாட்டேர்ன் (Pattern) என்னும் “முறை” எப்படி ஆழ்நிலையில் படைப்பாளிகளுக்கு வேலை செய்கிறது என்று கூறியிருந்தேன். கதை எழுதுபவர்களுக்கு, சொல்பவர்களுக்கு மட்டும் அல்ல அதை கேட்பவர்களுக்கும் பாட்டேர்ன் நமக்கே தெரியாமல் நம் வேளைகளில் தெரியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களை ஆராய்ச்சி செய்யும்போது எனக்கு கிடைத்த பாட்டேர்ன் மிகவும் ஆச்சரியபட வைத்தது. கதை இவரின் பட்டெரனுக்காக எழுதப்பட்டதா அல்லது இவர் அந்த பாடேர்ன் கதைகளை தேர்ந்தெடுத்தாரா என்கிற சந்தேகம் வருவது இயற்கையே.